

ஆன்லைன் மூலம் வீடு / சொத்துக்களை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹவுசிங் டாட் காம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.
2012 ல் இந்த நிறுவனத்தை தொடங்கினார். மும்பை ஐஐடியில் படித்தவர்.
இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவினரின் அறிவுசார்ந்த திறமை குறித்து விமர்சித்தவர் ஏப்ரல் 30 ம் தேதி இந்த நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆனால் மீண்டும் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் இவரே தலைவராக நீடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதால் தனது பணி விலகலை திரும்ப பெற்றார்.
நெக்ஸஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ், ஹூலியன் வென்ச்சர் பார்ட்னர்ஸ், சாப்ட் பேங்க், பால்காண்ட்ஜ் போன்ற வென்ச்சர் முதலீடு நிறுவனங்களின் 70 சதவீத வென்ச்சர் முதலீடு கொண்டு இந்த நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனத்துக்கு நிலங்கள் மேம்படுத்துவது மற்றும் வணிக மதிப்பு கொண்ட சொத்துகளை வாங்கி விற்பது, சர்வதேச விரிவாக்கம் என இதர துணை நிறுவனங்களும் உள்ளது.