கோல் இந்தியா ரூ.1.27 லட்சம் கோடி முதலீடு: அமைச்சர் பியுஷ் கோயல் தகவல்

கோல் இந்தியா ரூ.1.27 லட்சம் கோடி முதலீடு: அமைச்சர் பியுஷ் கோயல் தகவல்
Updated on
2 min read

பொதுத்துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1.27 லட்சம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது என்று மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரி, மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார். இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிலக்கரி உற்பத்தி 100 கோடி டன்னாக உயரும் என்றும் அவர் கூறினார்.

2019-20-ம் ஆண்டுகளில் 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்ட 2,000 கோடி டாலர் தேவைப்படுகிறது என்றார்.

தொழில்நுட்பத் திறனை அதிகரிப்பது மற்றும் ஏற்கெனவே உள்ள சுரங்கங்களில் பயன்படுத்தும் இயந்திரங்களை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்றார்.

சுரங்கப் பகுதி ஒதுக்கீடுகளுக் காக இடம்பெயர்வோருக்கான கட்டமைப்புகளை உருவாக்கித் தரவும் இந்த நிதியில் சிறிதளவு தொகை பயன்படுத்தப்படும் என்றார்.

ஒவ்வொரு சுரங்கங்களை தனித்தனியாக ஆய்வு செய்து அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கையின் அடிப்படை யில் தேவைப்படும் முதலீடு கணக் கிடப்பட்டுள்ளது. கோல் இந்தியா நிறுவனத்திடம் உள்ள நிதி வளம் மூலம் இந்த முதலீடுகளை வெற்றி கரமாக செயல்படுத்த முடியும் என்று கோயல் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே உள்ள சுரங்கங் களிலிருந்தும் புதிய சுரங்கங்களி லிருந்து நிலக்கரி வெட்டியெடுக்கப் பட்டு உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

நிலக்கரி உற்பத்தி அதிகரிப்புக்கு மத்திய அரசுடன் மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். உற்பத்தி அதிகரிப்பு என்பது குறித்த கால நிர்ணய அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

கோல் இந்தியா நிறுவனம் 70 முதல் 100 சுரங்கங்களை புதிதாக திறக்க திட்டமிட்டுள்ளது. இதில் மின் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகள் 39 சுரங்கங்களை திறக்க உள்ளன என்றார்.

இது தவிர தனியார் துறையினர் 70 முதல் 80 சுரங்கங்களை புதிதாக தொடங்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.

100 கோடி டன் நிலக்கரி உற்ப த்தி செய்யப்பட்டால் அதைப்பயன் படுத்தும் அளவுக்கு இந்தியா உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு 28 கோடி இந்தியர்களின் வீடுகளில் மின் வசதி இல்லை என்று பதிலளித்தார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் மின் உற்பத்தியை இரு மடங்கு அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவ்விதம் அதிகரிக்கும்போது நிலக்கரியின் தேவையும் அதிகரிக்கும் என்றார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் நம்பகமான நிறுவனமாக கோல் இந்தியா உயரும் என்று குறிப்பிட்ட அவர், நிலக்கரியின் விலையை உயர்த்தாமலேயே லாபமீட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கோல் இந்தியா நிறுவனம் எப்போது நிலக்கரியின் விலையை உயர்த்தும் என்று கேட்டதற்கு, இது மகா ரத்னா நிறுவனம், எப்போது விலையை உயர்த்த வேண்டும் என்பதை அந்த நிறுவனம்தான் தீர்மானிக்கும் என்றார்.

நிலக்கரி இறக்குமதி இப்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது முற்றிலுமாக நின்றுவிடும். இருப்பினும் அதிக வெப்பம் அளிக்கும் நிலக்கரி இறக்குமதி தொடரும் என்றார்.

கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனங்களான மகாநதி நிலக்கரிச் சுரங்கம் மற்றும் சௌத் ஈஸ்டரன் நிலக்கரிச் சுரங்கம் ஆகியவை விரிவாக்கத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.

கடந்த ஆண்டு கோல் இந்தியா நிறுவனம் 49 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்தது. இது நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் 3 சதவீதம் குறைவாகும்.

அடுத்த கட்ட நிலக்கரி சுரங்க ஏலம் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் உள்ளிட்ட பிரச்சினைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

சுரங்கம் அமைப்பதற்கு நிலங் களைக் கையகப்படுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, அங்கொன்றும் இங் கொன்றுமாக சிறு சிறு பிரச் சினைகள் ஏற்பட்டுள்ளன. அவை அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டன என்றார் கோயல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in