

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் வரை குறைத்திருக்கிறது. இதன் மூலம் அடிப்படை வட்டி விகிதம் 9.95 சதவீதமாக உள்ளது. இதனால் வீடு, கார் உள்ளிட்ட இதர கடன்களுக்கான இஎம்ஐ குறைவதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
இந்த வட்டி குறைப்பு நாளை முதல் (மே 4) அமலுக்கு வருவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. நடப்பாண்டில் ரிசர்வ் வங்கி 0.50 சதவீதம் வரை ரெபோ விகிதத்தை குறைத்திருக்கிறது. ஆனால் வட்டிகுறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வங்கி கொண்டு செல்லவில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் விமர்சனம் செய்ததை அடுத்து ஒவ்வொரு வங்கியாக வட்டி விகிதங்களை குறைத்து வந்தன.