Published : 05 May 2015 09:48 AM
Last Updated : 05 May 2015 09:48 AM

இவரைத் தெரியுமா?- ஆயுஷ் லோகியா

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான லோகியா ஆட்டோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2009-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருக்கிறார்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் காயில் தயாரிப்பு நிறுவனமான பிஹிவாடி மெட்டல் நிறுவனத்தின் இயக்குநராக மூண்டு ஆண்டுகள் பணியாற்றியவர்.

டிசைகோ நிறுவனத்தின் ஏற்றுமதி மேலாளராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

சந்தைப்படுத்துதல், பொருள் நிர்வாகம் மற்றும் விற்பனை துறைகளில் நிபுணத்துவம மிக்கவர்.

டெல்லி கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றவர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த உற்பத்திக்கு என்று சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளார்.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிறுவனர் உறுப்பினர்.

எலெக்ட்ரிக் பைக் சந்தையை விரிவுபடுத்த அமெரிக்காவின் யுஎம் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தோடு லோகியா கூட்டு சேர்ந்ததில் மிக முக்கிய பங்காற்றியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x