கார் விபத்தில் முதலீட்டு ஆலோசகர் பராக் பரிக் மரணம்

கார் விபத்தில் முதலீட்டு ஆலோசகர் பராக் பரிக் மரணம்
Updated on
1 min read

பங்குச்சந்தை முதலீட்டு ஆலோ சகரான பராக் பரிக் அமெரிக்கா வில் நடந்த கார் விபத்தில் மரணம் அடைந்தார். பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் (இது வாரன் பஃபெடின் நிறுவனமாகும்) ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெ ரிக்காவில் உள்ள ஒஹாமா மாகாணத்துக்குச் சென்றார்.

மனைவி மற்றும் தன்னுடைய நிறுவனத்தின் உயரதிகாரி களுடன் காரில் செல்லும் போது கடந்த ஞாயிறு அன்று கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் பராக் பரிக் மரணம் அடைந்தார். இவரது மனைவி கீதா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். உடன் அவரது நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி ராஜிவ் தாக்கர் (இவர் காரை ஒட்டியவர்) மற்றும் இன்னொரு உயரதிகாரி சென்றிருக்கிறார். இருவரும் சிறிய காயங்களுடன் தப்பித்து விட்டனர்.

1979-ம் ஆண்டு சப் புரோக்கராக பங்குச்சந்தையில் நுழைந்தவர். வேல்யூ இன்வெஸ்டிங் முறை யைக் கடைபிடிப்பவர். பிஹேவி யரல் பைனான்ஸ் பற்றிய 2 முக்கியமான புத்தகங்களை எழுதி இருக்கிறார்.

ஒரு வருடத்துக்கு முன்பு பிபிஎப்ஏஎஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தைத் தொடங்கினார். இதில் ஒரே ஒரு பண்ட் (பிபிஎப்ஏஎஸ் லாங்க் டேர்ம் ஈக்விட்டி பண்ட்) மட்டும் உள்ளது.

இந்த பண்ட் வெளிநாட்டு பங்குச்சந்தையில் கணிசமாக முதலீடு செய்யும். கூகுள் உள்ளிட்ட அமெரிக்க பங்கு களில் இந்த பண்ட் முதலீடு செய்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in