

விவசாயத் துறை மூலம் மட்டும் வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளது. நீண்ட கால அடிப்படையில் வேலை வாய்ப்பை உருவாக்க தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்தார்.
6 சதவீதம் மற்றும் அதற்கு மேலான பொருளாதார வளர்ச் சியை எட்டிய நாடுகள் அனைத்துமே வெறும் வேளாண் துறையை மட்டும் நம்பியிருக்கவில்லை. தொழில் துறை மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சியானது வேளாண் துறை வளர்ச்சியை விட விரைவாக உள்ளது. மேலும் வேலை வாய்ப்பை பெருக்குவது என்பது தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளில் அதிகம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி ஆயோக் அமைப் பின் இணையதளத்தில் அவர் வெளி யிட்டுள்ள கருத்துகள் வருமாறு:
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்களிப்பு 15 சதவீத அளவுக்கு உள்ளது. விவசாயத்துறையில் ஈடுபட்டு வேலை வாய்ப்பைப் பெற் றுள்ளவர்களின் அளவானது தொழில்துறை மற்றும் சேவைத் துறைகள் அளிக்கும் வேலை வாய்ப்பை விடக் குறைவாக உள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற் கான வாய்ப்பு வேளாண்துறைக்குக் குறைவாகவே உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வேலை வாய்ப்பு மிகவும் முக்கியமானது. அத்தகைய வேலை வாய்ப்புகளை தொழில்துறையும் சேவைத் துறையுமே அதிக அளவில் அளிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேளாண் துறை வளர்ச்சியோடு தொழில் துறை வளர்ச்சி மற்றும் சேவைத் துறை வளர்ச்சியும் ஒருங்கே நடைபெறும்போது நாட்டில் வறுமை ஒழியும், இதன் மூலம் அனைவரது வாழ்விலும் சுபிட்சம் ஏற்படும் என்று பனகாரியா குறிப் பிட்டார்.
அதிக ஊதியம் கிடைக்கும் தொழிலுக்கு விவசாயத் தொழி லாளர்கள் மாறாத வரை, அவர் களால் வளமான வாழ்க்கையை அனுபவிக்க முடியாது. விரைவான வளர்ச்சியை எட்டிவரும் இந்தி யாவில் இவர்களால் அந்த வளர்ச்சியின் பயனை அனுபவிக்க முடியாமல் போகலாம் என்றார்.
1960 மற்றும் 1970ம் ஆண்டுகளில் தென்கொரியாவும், தாய்வானும் வளர்ச்சியை எட்டியதை சுட்டிக் காட்டிய அவர், அந்நாடுகளில் விவசாயத் தொழிலாளர்கள் அனை வரும் தொழில்துறைக்கு மாறி யதால் இத்தகைய வளர்ச்சி அங்கு சாத்தியமானது என்று சுட்டிக் காட்டினார். விவசாயிகள் தங்கள் குழந்தைகளுக்கு விரைவான வளர்ச்சி தொழில்துறையில் சாத்தியம் என்பதை உணர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் 62 சதவீத விவசாயிகள் தங்களுக்கு நகர்ப் பகுதிகளில் வேலை வாய்ப்பு கிடைத்தால் விவசாயத் தொழிலை விட்டு விடப் போவதாகக் கூறி யுள்ளனர். இதேபோல 72 சதவீத விவசாயிகள் தங்கள் குழந் தைகள் வேறு வேலைக்குச் செல் வதையே விரும்புகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. மத் திய அரசின் மேக் இன் இந்தியா திட்டமானது இதுபோன்ற பல் வேறு அம்சங்களை உள்ளடக்கியது என்று பனகாரியா குறிப்பிட்டார்.
கூட்டாட்சி தத்துவத்தைக் குறிப் பிட்ட அவர், தொழிலாளர் சட்ட சீர் திருத்தங்களை மாநில அரசுகள் மேற்கொள்வதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றார்.
இந்த விஷயத்தில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநி லங்கள் முன்னோடியாகத் திகழ் கின்றன என்று குறிப்பிட்டார். மத்திய அரசு 44 தொழிலாளர் விதி களை 5 விதிகளாக மாற்றியுள் ளது. அத்துடன் தொழில் தொடங்கு வதற்கேற்ப விதிமுறைகளில் சீர்திருத்தம் செய்துள்ளதாகவும் பனகாரியா குறிப்பிட்டுள்ளார்.