

எம்எம்சிஜி துறையை சேர்ந்த ஹெச்யூஎல் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 16 சதவீதம் உயர்ந்து ரூ.1,018 கோடியாக உள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.872 கோடியாக இருந்தது.
மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை 8.92 சதவீதம் உயர்ந்தது. கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் காலாண்டில் 6,935 கோடி ரூபாயாக இருந்த விற்பனை இப்போது 7,555 கோடி ரூபாயாக உள்ளது. சந்தையில் சவாலான சூழ்நிலை இருந்தாலும், எங்களுடைய சந்தை உத்தியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இந்த வருடமும் சிறப்பான செயல்புரிந்திருக்கிறோம் என்று நிறுவனத்தின் தலைவர் ஹரிஷ் மன்வானி தெரிவித்தார்.
கடந்த 2013-14-ம் நிதி ஆண்டில் 3,867 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் 2014-15-ம் நிதி ஆண்டில் ரூ.4,315 கோடியாக உயர்ந்திருக்கிறது. 2013-14-ம் நிதி ஆண்டில் 27,408 கோடி ரூபாயாக இருந்த விற்பனை 2014-15-ம் நிதி ஆண்டில் 30,170 கோடி ரூபாயாக இருந்தது. ஒரு பங்குக்கு 9 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.