பாதி பங்குகளை ஊழியர்களுக்கு தருவீர்களா?- 2 நிறுவனத் தலைவர்களுக்கு ராகுல் யாதவ் சவால்

பாதி பங்குகளை ஊழியர்களுக்கு தருவீர்களா?- 2 நிறுவனத் தலைவர்களுக்கு ராகுல் யாதவ் சவால்
Updated on
1 min read

தங்கள் வசம் உள்ள பங்குகளில் பாதியையாவது தனது ஊழியர்களுக்கு ஓலா மற்றும் ஸோமாடோ நிறுவனத் தலைவர்கள் தரத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஹவுசிங்.காம் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் யாதவ்.

கடந்த செவ்வாய் கிழமை தன் வசமிருந்த ரூ. 200 கோடி மதிப்பிலான பங்குகளை தனது ஊழியர்கள் அனைவருக்கும் அளித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் ராகுல் யாதவ்.

இதேபோல ஐஐடி முன்னாள் மாணவர்களான ஓலா மற்றும் ஸோமாடோ நிறுவனங்களின் நிறுவனர்கள் பாதி பங்குகளையாவது அளிப்பதற்கு துணிச்சல் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஃபேஸ்புக் தளத்தில் அவர் எழுதியிருப்பதாவது: ஸோமாடோ தீபிந்தர் கோயல் மற்றும் ஓலா கேப்ஸ் நிறுவனர் பாவிஷ் அகர்வால் ஆகிய இருவரும் தங்கள் வசம் உள்ள பங்குகளில் பாதியையாவது தனது ஊழியர்களுக்குத் தர முன்வருவார்களா என்று கேட்டுள்ளார். மேலும், இதுபோன்ற சவாலை அவர்கள் மற்றவர்களுக்கு விடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று எழுதியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள தீபிந்தர் கோயல், இது மிகவும் அழகாக உள்ளது என்றும், பாவிஷ் அகர்வால் அவருக்கு ஒரு குக்கி பிஸ்கெட்டை அளியுங்கள் என்றும் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in