

வரும் 2016-17-ம் நிதி ஆண்டில் விரிவாக்க பணிகளுக்காக ரூ.1,800 கோடியை முதலீடு செய்ய கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
தவிர நடப்பு நிதி ஆண்டில் விற்ப னையில் 30 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.கல்யாணராமன் தெரிவித்தார்.
“கடந்த வருடம் நிறுவனத்தின் விற்பனை ரூ.10,000 கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் 30 சதவீதம் உயர்ந்து ரூ.13,000 கோடி அளவுக்கு விற்பனை உயரும். விற்பனை மையங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு இந்த தொகை முதலீடு செய்யப் படும்.
ரீடெய்ல் கடைகளை அதிகரித்து வரும் அதே வேளையில் ஆன் லைன் விற்பனையிலும் இந்த ஆண்டில் இறங்க திட்டமிட்டு வருகிறோம். இதற்காக சொந்த இணையதளம் அமைக்கும் பணி நடந்துவருகிறது’’ என்றார் அவர்.
இந்நிRuவனம் புவனேஷ்வரம், நாக்பூர், கொல்கத்தா ஆகிய நகரங் களில் கிளை தொடங்க விருக்கிறது.