

ஆட்டோமொபைல் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஆம்டெக் ஆட்டோ நிறுவனம் ஜெர்மனியைச் சேர்ந்த ரெகே ஹோல்டிங் எனும் நிறுவனத்தை வாங்கியுள்ளது. எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
ஆம்டெக் நிறுவனத்தின் துணை நிறுவனமாக சிங்கப்பூரில் செயல் படும் ஆம்டெக் என்ஜினீயரிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் ஜெர்மனியைச் சேர்ந்த ரெகே ஹோல்டிங் நிறுவனம் வாங்கப் பட்டுள்ளது. ரெகே நிறுவனத்துக்கு ஜெர்மனி மற்றும் ருமேனியாவில் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இவற்றில் ஆட்டோமொபைல் துறைக்குத் தேவையான பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. கையகப்படுத்தும் நடவடிக்கை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என தெரிகிறது.