கேவிபி லாபம் ரூ.464 கோடி

கேவிபி லாபம் ரூ.464 கோடி
Updated on
1 min read

கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ. 464.28 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் லாபம் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 429.60 கோடியாக இருந்தது.

வங்கியின் மொத்த வர்த்தகம் 4.36 சதவீதம் அதிகரித்து ரூ. 81,381 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் வர்த்தகம் ரூ. 77,984 கோடியாக இருந்தது.

வங்கியின் மொத்த வருமானம் ரூ. 5,976 கோடியாகும். முந்தைய ஆண்டு இது ரூ. 5,680 கோடியாக இருந்தது. வட்டி மூலமான வருமானம் 14 சதவீதம் அதிகரித்து ரூ. 1,465 கோடியாக உயர்ந்துள்ளது. பிற இனங்கள் மூலமான வருமானம் 2.90 சதவீதம் அதிகரித்து ரூ. 580 கோடியைத் தொட்டுள்ளது.

நான்காம் காலாண்டில் வங்கியின் லாபம் ரூ. 137.83 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ. 119.59 கோடியாக இருந்தது.

ஒரு பங்குக்கு ரூ. 13 ஈவுத் தொகை அளிக்க இயக்குநர் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in