Published : 04 May 2015 09:43 AM
Last Updated : 04 May 2015 09:43 AM

இணைய சமநிலை விவகாரத்தில் டெலிகாம் நிறுவனங்களுக்கு 40 லட்சம் பேர் ஆதரவு

இணைய சமநிலை விவகாரத்தில் டெலிகாம் நிறுவனங்களுக்கு ஆதரவாக 40 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் என்று இந்திய செல்போன் ஆபரேட்டர்கள் சங்கம் (சிஓஏஐ) தெரிவித்திருக்கிறது. இந்த ஆதரவு எஸ்.எம்.எஸ்., குரல் அழைப்புகள் உள்ளிட்ட பல வகையில் வந்திருப்பதாகவும் சிஓஏஐ தெரிவித்திருக்கிறது.

கடந்த வாரம் ‘சப்கா இண்டர்நெட், சப்கா விகாஸ்’ என்ற பிரசாரத்தை சி.ஓ.ஏ.ஐ. வெளியிட்டது. அதாவது அனைவருக்குமான இணையம், அனைவரின் மேம்பாடு என்னும் கருத்தை வெளியிட்டது.

இதில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சமவாய்ப்பு வேண்டும் என்றும், வாட்ஸ்ஆப், ஸ்கைப் உள்ளிட்ட நிறுவனங்களால் எங்களுடைய வருமானம் குறைகிறது. இதனால் சந்தையில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வேண்டும் என்பதை வலியுறுத்தி சி.ஓ.ஏ.ஐ. பிரச்சாரம் செய்தது.

டெலிகாம் நிறுவனங்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்படவில்லை. இணையதள சேவை நிறுவனங்கள் மூலமாக எங்கள் வருமானம் பாதிக்கிறது. சமவாய்ப்பு இல்லை என்றால் டேட்டாவுக்கான கட்டணத்தை நாங்கள் 6 மடங்கு வரை உயர்த்த வேண்டும் என்று சி.ஓ.ஏ.ஐ. தெரிவித்தது.

கட்டணத்தை உயர்த்தினால் இந்தியாவில் உள்ள பலருக் கும் இணையசேவை கிடைக் காமல் போய்விடும் அபாயம் உள்ளது. மேலும் வாடிக்கையாளர் களுக்காகத்தான் இந்த பிரசாரம் என்றும் சி.ஓ.ஏ.ஐ. தெரிவித்தது. கடந்த சில நாட்களாக இணைய சமநிலை குறித்த விவாதங்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் ஜீரோ என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதில் சில இணைய தளங்களை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அறிவித்தது.

இந்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் இணைய சமநிலைக்கு ஆதரவாக ஏர்டெல் ஜீரோ திட்டத்தில் இருந்து வெளியேறியது. சில இணைய தளங்களை இலவசமாக கொடுக்கும்போது, சில இணைய தளங்களை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பு இருக் கிறது. அதனால் இணையதளம் பயன்படுத்து பவர்களுக்கு சம வாய்ப்பு வேண்டும் என்பது குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்திருக்கின்றனர்.

டெலிகாம் நிறுவனங்கள் இணைய சமநிலைக்கு எதிராக இருக்கிறார்கள் என்று குற்றச் சாட்டு வைக்கப்பட்ட நிலையில் இந்த பிரசாரத்தை டெலிகாம் நிறுவனங்கள் கையில் எடுத்திருக் கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x