Published : 19 May 2015 10:09 AM
Last Updated : 19 May 2015 10:09 AM

இவரைத் தெரியுமா?- டாம் அல்பேன்ஸ்

வேதாந்தா குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. ஏப்ரல் 2014 லிருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.

இதற்கு முன்பு ரியோ டின்டு குழுமத்தின் தலைவர் மற்றும் தலை மைச் செயல் அதிகாரியாக பணியாற் றினார். இந்த குழுமத்தில் பல்வேறு தலைமை பொறுப்புகளையும் வகித் தவர்.

பலபோரா சுரங்க நிறுவனத்தில் பொறுப்புகளற்ற இயக்குநராகவும், டர்கோய்ஸ் ஹில் ரிசோர்சஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

10 வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 46 நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருக்கிறார்.

ஃபிரான்கோ-நிவேதா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தனி இயக்குநராகவும், தணிக்கை மற்றும் ரிஸ்க் கமிட்டியின் உறுப்பினராகவும் உள்ளார்.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் பிறந்தவர். அலாஸ்கா பயர்பேங்க்ஸ் பல்கலைக்கழகத்தில் தாது பொருளாதாரம் மற்றும் சுரங்க பொறியியல் பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x