

ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் மேம்படுத்தும் பணிக்கு இந்தியாவைச் சேர்ந்த அதானி குழும நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1,546 கோடி டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்துக்கு குயீன்ஸ்லாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கார்மிகேல் நிலக்கரிச் சுரங்கம் மற்றும் ரயில் திட்டப் பணி மூலம் ஆண்டுக்கு 6 கோடி டன் அளவுக்கு நிலக்கரி கிடைக்கும். அத்துடன் 189 கி.மீ. ரயில்வே லைன் அமைக்க வேண்டும்.இந்த நடவடிக்கைகளுக்கு பெடரல் அரசு தற்போது இறுதி அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் 2,500 கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் 3,900 நிர்வாக ஊழியர்களுக்கும் வேலை கிடைக்கும். இதன் மூலம் குயீன்ஸ்லாந்து பகுதியின் பொருளாதாரம் மேம்படும்.சுரங்கப் பணியை மேற்கொள்வதோடு 189 கி.மீ தூரத்துக்கு ரயில்வே லைன் அமைக்கும் பணியும் அதில் அடங்கும். -பி.டி.ஐ