

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 7% உயர்ந்து 174 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் 162 கோடி ரூபாயாக நிகரலாபம் இருந்தது.
மொத்த வருமானமும் உயர்ந் திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 6,961 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 7,321 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. வங்கியின் மொத்த மற்றும் நிகர வாராக்கடன்கள் குறைந் திருக்கின்றன.
மொத்த வாராக் கடன் 6.27 சதவீதத்தில் இருந்து 6.09 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 3.75 சதவீதத்தில் இருந்து 3.61 சதவீதமாகவும் குறைந்திருக்கிறது.
நிகர வட்டி வருமானம் 12% உயர்ந்திருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் 606 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்திருக்கிறது. 2013-14ம் நிதி ஆண்டில் 1,262 கோடி ரூபாய் நஷ்டமடைந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் 26,350 கோடி ரூபாயிலிருந்து 28,303 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.