வங்கிகளின் வாராக் கடன் ரூ.54 ஆயிரம் கோடி: அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தகவல்

வங்கிகளின் வாராக் கடன் ரூ.54 ஆயிரம் கோடி: அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தகவல்
Updated on
1 min read

கடந்த நிதி ஆண்டில் (2014-15) பொதுத்துறை வங்கிகள் கட்டமைப்பு திட்டப் பணிகளுக்கு அளித்த கடனில் ரூ. 54 ஆயிரம் கோடி வாராக் கடனாக உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறினார்.

மாநிலங்களவையில் நேற்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் மொத்தம் 74 திட்டப்பணிகளில் 17 திட்டப் பணிகள் முடங்கியுள்ளன. இதில் முடங்கியுள்ள வாராக் கடன் தொகை ரூ. 54,056 கோடி என்றார்.

இருப்பினும் கடன் பெற்ற நிறுவனங்கள், முடங்கியுள்ள திட்டப் பணிகள் விவரத்தை வெளியிடவில்லை. இந்த வாராக் கடன் தொகையில் ரூ. 1,308 கோடி அசலும், ரூ. 548 கோடி வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து (பிசிசிஐ) ரூ.2,140 கோடி வரியாக வசூலிக் கப்பட்டுள்ளது. இத்தொகை 2004-05-ம் நிதி ஆண்டிலிருந்து கணக்கிட்டு வசூலிக்கப்பட்ட தொகை என்று சின்ஹா மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் தெரி வித்தார்.

மொத்தம் செலுத்த வேண்டிய ரூ.2,510 கோடியில் இதுவரை ரூ.2,140 கோடியை பிசிசிஐ செலுத்தி விட்டது. எஞ்சியுள்ள தொகை தடையாணை காரணமாக வசூலிக்கப்படவில்லை.

தேசிய அளவில் வரி செலுத்து வதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ள தொகையின் அளவு ரூ. 5,75,340 கோடியாகும். வரி வசூலில் கால தாமதமாவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும் இவற்றில் 130 வழக்குகள் தீர்ப் பாயம் முன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த நிதி ஆண்டில் 3.41 கோடி பேர் வருமான வரி கணக்கை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்துள்ளனர். இது மொத்தம் தாக்கல் செய்பவர்களில் 87 சதவீத மாகும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in