Published : 29 May 2015 09:53 AM
Last Updated : 29 May 2015 09:53 AM

50 லட்சம் கார்களில் உயிர் காக்கும் காற்றுப் பை பழுது?

சொகுசான பயணத்துக்கு கார்கள் என்பதிலிருந்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கார்களில் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஏர் பேக் எனப்படும் காற்றுப் பை மிகவும் முக்கியமானதாகும்..

விபத்துகளின்போது காரின் பக்கவாட்டுப் பகுதி, முன் பகுதி மற்றும் பின் பகுதியிலிருந்து காற்றுப் பை விரிந்து பயணிகளின் உயிரைக் காக்கும். இதுதான் இதன் பிரதான வேலை.

அத்தகைய காற்றுப் பை விபத்தின் போது விரியாவிட்டால் அது இருந்தென்ன அல்லது இல்லாமலிருந்தால் என்ன?

கார்களுக்கான காற்றுப் பைகளைத் தயாரித்து அளிக்கும் நிறுவனங்களில் மிகவும் பிரபல மானது ஜப்பானின் டகடா கார்ப்பரேஷன். இந்நிறுவனம் தயாரித்த காற்றுப் பைகளில் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இது விபத்து நேரிட் டாலும் பயணிகளின் உயிரைக் காக்க உதவாது.

அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 6 பேர் உயிரழப்புக்கு மிக முக்கிய காரணம் இந்த காற்றுப் பைகள் விரிவடையாததுதான் என்பது மிகவும் சோகமான விஷயம்.

இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக உருவானது. கார் தயாரிப்பு நிறுவனங்களான ஹோண்டா, டொயோடா, நிசான் ஆகியவை தங்களது கார்களில் பொறுத்தப்பட்ட டகடா காற்றுப் பைகளை சோதிக்கத் தொடங்கின.

இதில் இந்நிறுவனம் சப்ளை செய்த காற்றுப் பைகள் அனைத் துமே பழுதானவையாக இருக் கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து உலகம் முழு வதும் ஹோண்டா நிறுவனம் 50 லட்சம் கார்களை திரும்பப் பெற்றுள்ளது. இந்தக் கார்களில் உள்ள காற்றுப் பைகள் அனைத்தும் நீ்க்கப்பட்டு புதிய காற்றுப் பைகளை பொறுத்தி நிறுவனம் அளித்துள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் பழுது நீக்குவதற்காக கார்களை திரும்பப் பெறும் நடவடிக்கை மிக அதிக அளவில் மேற்கொள் ளப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். ஹோண்டா நிறுவனம் திரும்பப் பெற்ற 50 லட்சம் கார்கள் தவிர மொத்தம் 2 கோடி கார்களில் டகடா நிறுவன காற்றுப் பைகள் பொறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

கார்கள் விபத்துக்குள்ளாகும் போது விரிவடைந்து மனித உயிர் களைக் காப்பாற்ற வேண்டிய காற்றுப் பைகள் விரிவடையாமல் போனது ஒருபுறமிருந்தாலும், கார் இயக்கத்தின்போது இவை சிதைந்து வெடிக்கும் அபாயம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.

2008-ம் ஆண்டிலிருந்து இது வரை கார் தயாரிப்பு நிறுவ னங்கள் ஏர் பேக் பிரச்சினை அதிலும் குறிப்பாக டகாடா நிறுவன ஏர்பேக்குகளில் பழுது ஏற்பட்ட காரணத்துக்காக 3.60 கோடி கார்கள் திரும்பப் பெறப் பட்டுள்ளன.

கார்களில் உயிர் காக்கும் காற்றுப் பை அவசியம். வாகனத்தை சர்வீசுக்கு விடும் போது, இது சரிவர உள்ளதா என்பதை சோதிப்பதும் இனி அவசியமாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x