

கடந்த மூன்று மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது மூன்று மாதங்களில் இதுவரை சவரனுக்கு ரூ. 180 சரிந்துள்ளது.
நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 2,596 ஆக இருந்தது. ஒரு சவரன் (8 கிராம்) ரூ. 20,768-க்கு விற்பனையானது. இதேபோல 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 7 குறைந்து ரூ. 2,777 ஆக விற்பனையானது. டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்து வருவதால் இறக்குமதி செய் வதற்கான தங்கத்துக்கு செலவிடு வதும் கணிசமாக குறைந்துள்ளது.
இதேபோல வெள்ளியின் விலை யும் கிலோவுக்கு ரூ. 100 குறைந்து ரூ. 39,400 என்ற விலையில் விற் பனையானது. சர்வதேச அளவில் தங்க வர்த்தகத்தில் நிலவும் தேக்க நிலையும் தங்கத்தின் விலை சரிவுக்கு முக்கியக் காரணமாகும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.