

ஆதித்ய பிர்லா குழுமத்தை சேர்ந்த ஐடியா செல்லுலார் நிறுவனம் விரிவாக்க பணிகளுக்காக ரூ.5,500 முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் செய்யப்படும் இந்த முதலீடு கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், நெட்வொர்க் உள்ளிட்ட விஷயங்களில் முதலீடு செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த முதலீட்டுக்காக கடன் வாங்கப்போவதில்லை என்றும், நிறுவனத்தில் இருக்கும் தொகையை பயன்படுத்தப் போவதாகவும் தெரிவித்திருக் கிறது.
இப்போதைக்கு 4ஜி பிரிவில் நுழைய திட்டம் இல்லை என்று நிறுவனத்தின் கார்ப்பரேட் பிரிவு அதிகாரியான ரஜத் முகர்ஜி தெரிவித்தார். இப்போது 10 வட்டங்களில்தான் 4ஜி லைசென்ஸ் உள்ளது. மேலும் 4ஜி ஆரம்ப நிலையில் உள்ளது.
விலை, பயன்பாடு, வாடிக்கை யாளர்கள் பயன்படுத்தும் செல்போன் என பல விஷயங்கள் இருப்பதால் 4ஜி சேவை இப்போதைக்கு இல்லை என்று தெரிவித்தார். தவிர 3ஜி இப்போதுதான் விரிவடைந்து வருகிறது என்றார்.
மேற்கு வங்கத்தில் விரிவாக்க பணிகளுக்காக 380 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஐடியா திட்டமிட்டிருக்கிறது.