நிதி மசோதாவில் இருந்து பொதுக் கடன் மேலாண்மை மையம் நீக்கம்: மக்களவையில் அருண் ஜேட்லி தகவல்

நிதி மசோதாவில் இருந்து பொதுக் கடன் மேலாண்மை மையம் நீக்கம்: மக்களவையில் அருண் ஜேட்லி தகவல்
Updated on
1 min read

2015-16-ம் ஆண்டு நிதி மசோ தாவில் இருந்து பொதுக்கடன் மேலாண்மை மையம் (பி.டி.எம்.ஏ) நீக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தெரிவித்தார்.

நிதிக்கொள்கையின் கீழ் ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி பணவீக்கம் 4 சதவீதத்துக்குள் (கூடுதலாக 2% அல்லது குறைவாக 2%) கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது. அவ்வாறு வைத்திருக்க வேண்டுமெனில், அரசின் பொதுக்கடன் மேலாண்மை செயல்பாட்டை ரிசர்வ் வங்கியிடம் இருந்து எடுத்துவிட வேண்டும் என்ற கருத்தையும் ஆர்பிஐ கூறிவருகிறது.

அதனாலேயே பொதுக்கடன் மேலாண்மை மையம் ஏற்படுத்த மத்திய அரசு ஓப்புக்கொண்டது. இந்த மையம் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாடு இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும் என்று எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் பிஎம்டிஏ-வை நிதி மசோதாவில் இருந்து இந்த வருடம் நீக்குவதாக அருண் ஜேட்லி தெரிவித்தார்.

அரசாங்கம் தற்போது வாங்கும் கடன்களை ரிசர்வ் வங்கிதான் நிர்வகித்து வருகிறது. அரசுப்பத்திரங்களை வெளி யிடுவது, நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை ரிசர்வ் வங்கி செய்கிறது.

அதே சமயத்தில் அரசு பொதுக் கடனை தனியாக ஒரு மையம் மூலம் நிர்வகிப்பதுதான் சர்வதேச அளவில் இருக்கும் நடைமுறை ஆகும். இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தனியாக ஒரு மையம்தான் இதனைக் கையாளுகிறது என்று ஜேட்லி தெரிவித்தார்.

தனி ஏஜென்சிக்கான தேவை என்ன?

பணவீக்கத்தைக் கட்டுப்படுத் துவது ரிசர்வ் வங்கியின் முக்கிய மான பணிகளில் ஒன்றாகும். ஆனால் அரசு வெளியிடும் பத்திரங் களை கையாளுவதன் மூலம் குறை வான வட்டி நிர்ணயம் செய்ய வேண்டி இருக்கும். அதனால் பண வீக்கத்தை கையாளுவதில் சிரமம் ஏற்படுவதால் தனி மையம் தேவை. அதேபோல அரசு பத்திரங்களை ரிசர்வ் வங்கி ஒழுங்குபடுத்துவது மட்டுமல்லாமல் அந்த பத்திரங்களில் வர்த்தகத்திலும் ரிசர்வ் வங்கி ஈடுபடும். இந்த காரணங்களுக்கான புதிய மேலாண் மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முடிவெடுப்பதில் பயம் கூடாது

அரசு அதிகாரிகள் அரசாங் கத்தின் கொள்கை முடிவுகளை சரியாக புரிந்துகொள்ள வேண்டும், அதேபோல முடிவெடுப்பதில் பயம் கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரி வித்தார்.

இந்த சமூகமும் பொருளா தாரமும் பெருமளவு மாறி வருகிறது. அதனால் அரசு அதிகாரிகள் பயம் இல்லாமலும், பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையிலும் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றார்.

இந்திய பொது நிர்வாக கல்வி மையத்தின் பட்டமளிப்பு விழாவில் அருண்ஜேட்லி இவ்வாறு தெரி வித்தார்.

சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவெடுப்பதை தவிர மாற்று யோசனைகள் இருக்கும் பட்சத்தில் அதை தெரிவிக்கவும் அரசு அதிகாரிகள் தயங்கக்கூடாது.

அரசாங்கத்துக்கும் பொதுமக்க ளுக்கும் இடையே இணைப்பு பாலமாக அரசு அதிகாரிகள் திகழ வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in