

சில்வர் நிற மெர்சிடிஸ் பென்ஸ் என் விருப்பமான கார். அதன் மென்மையான சத்தம் தொடங்கி இருக்கையில் அமர்ந்து செல்லும்போது உணரும் பாதுகாப்பு வரை அதன் ஒவ்வொரு சிறப்பையும் வரிசையாக அடுக்கிக்கொண்டே போகலாம்.
தினசரி பணிகளிலிருந்து கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் இந்தியா முழுவதும் உள்ள புராதன சின்னங்கள், ஆன்மிகத் தலங்கள் என வட்டமடிக்க புறப்பட்டு விடுவேன். இந்தப் பயணங்கள் பெரும்பாலும் எனது பென்ஸ் காரில்தான் அமையும்.
ஆக்ராவிலிருந்து ஜெய்ப்பூர் பேலஸ், பெங்களூரிலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என்று எப்படியும் மூன்று மாதத்தில் ஒரு பயணம் அமைந்துவிடும். எவ்வளவு தொலைவு பயணம் செய்தாலும் மிதமான வேகம்தான் என் விருப்பம்.
சாலையின் இரண்டு பக்கங்களில் பசுமை சூழ்ந்திருக்கும் இடங்களில் சின்னச் சின்ன தூறல்கள் விழ மெர்சிடிஸ் பென்ஸ் காரில் பயணிக்கும் போது மனம் அடையும் மகிழ்ச்சியை, வேறு எதிலும் நான் அடைந்ததில்லை.