

மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஒரு வருடம் முடிவுரும் நிலையில், தொழில் அமைப்பான அசோசேம் பத்துக்கு 7 மதிப்பெண் வழங்கி இருக்கிறது. வரி பிரச்சினைகள், தொழில் புரிவதற்காக எளிமை யான சூழல் என பல விஷயங் கள் செய்ய வேண்டி இருந்தா லும், இதுவரையிலான செயல்பாட் டுக்கு 7 மதிப்பெண் வழங்குவதாக அசோசேம் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஒரு வருடத்தில் பேரியல் பொருளாதாரம் நன்றாக முன்னேறி இருக்கிறது. பங்குச்சந்தைகள் உயர்ந்திருக்கின்றன, பணவீக்கம் குறைந்திருக்கிறது, ரூபாய் மாற்று மதிப்பு ஓரளவுக்கு நிலைபெற்றிருக்கிறது என்று அசோசேம் தெரிவித்திருக்கிறது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர் களுக்கு முன் தேதியிட்டு வரி விதிப்பது, பெரிய கட்டுமான திட்டங்களை முடுக்கிவிடுவது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
2 டிரில்லியன் டாலர் அளவு உள்ள பொருளாதாரம், அரசாங் கம் மாறுவதால் மட்டுமே அதிக வளர்ச்சி அடைய முடியாது என் பதை துறை வல்லுநர்கள் உணர்ந் திருக்கிறார்கள். இருந்தாலும் அரசாங்கம் தற்போது எடுத்து வரும் நடவடிகைகளால், முதலீடு கள் உயர்ந்து நுகர்வோர் தேவை அதிகரிக்க இன்னும் 24 முதல் 30 மாதங்கள் வரை தேவைப்பட லாம் என்று அசோசேம் தெரிவித்திருக்கிறது.
சரக்கு மற்றும் சேவை வரி மீது அரசாங்கம் கவனம் செலுத்துவது நல்ல தொடக்கம் மட்டுமல்லாமல் நம்பிக்கையும் தருகிறது.
நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட்டது. கடந்த ஒரு வருடத் தில் பல முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது ஆகிய காரணங் களால் 7 மதிப்பெண்களுக்கு மத்திய அரசு தகுதியானது என்று அசோசேம் தலைவர் ரானா கபூர் தெரிவித்துள்ளார். மேலும் நிலக்கரி மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் நடந்த வெளிப்படைத்தன்மை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது என்றார்.
பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இது பொருளாதாரத்தில் எதிரொலித் துள்ளது. முக்கிய நாடுகளுக்கு செல்வது மற்றும் முக்கிய கருத் தரங்கங்களில் கலந்து கொள்வ தன் மூலமாக இந்தியா மீதான பார்வை மாறி இருக்கிறது. மேக் இன் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி மற்றும் தூய்மை இந்தியா போன்ற திட்டங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ஜன் தன் யோஜனாவின் கீழ் 14 கோடி கணக்குகள் தொடங் கப்பட்டிருப்பது வரவேற்க தகுந் தது என்றாலும், இந்த கணக்குகள் இருப்பு ஏதும் தேவைப்படாத கணக்குகள் என்பதால் இவை செயல்படுகின்றவா என்பதை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.
பணவீக்கம் குறைவாக இருப்பது வரவேற்க தகுந்ததாக இருந்தாலும் உணவு பொருட்கள் விலையை நிர்வாகம் செய்வதில் கவனம் செலுத்தினால்தான் பணவீக்கத்தை இந்த நிலை யிலே தொடரவைக்க முடியும் என்று அசோசேம் தெரிவித் திருக்கிறது.