Published : 22 May 2015 10:04 AM
Last Updated : 22 May 2015 10:04 AM

இவரைத் தெரியுமா?- விஜய் ஜசூஜா

எஸ்பிஐ கார்டு நிறு வனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. ஜூலை 2014 லிருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.

பாரத ஸ்டேட் வங்கி யின் ஆந்திர பிரதேச மேலாளர் மற்றும் சில்லரை வர்த்தகப் பிரிவு தலைவர், சர்வதேச சில்லரை வர்த்தகப் பிரிவு பொதுமேலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

பொருளாதாரத்தில் முதுநிலை பட்டமும், இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் பேங்கர்ஸ் பட்டமும் பெற்றுள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொது மேலாளராக பணியாற்றியவர். இந்திய அளவில் பல மாநிலங்களிலும் வங்கியின் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியவர்.

வங்கித்துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். சில்லறை வர்த்தகம், கார்ப்பரேட் பேங்கிங், சர்வதேச வங்கிக் சேவை போன்றவற்றில் வல்லுனர்.

பாரத ஸ்டேட் வங்கியின் மாலத்தீவு செயல்பாடுகளுக்கான தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தென் ஆப்பிரிக்க பிராந்திய தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x