பியூச்சர் குழுமத்துடன் இணைகிறது பார்தி ரீடெய்ல்: இரு இயக்குநர் குழுவும் ஒப்புதல்

பியூச்சர் குழுமத்துடன் இணைகிறது பார்தி ரீடெய்ல்: இரு இயக்குநர் குழுவும் ஒப்புதல்
Updated on
2 min read

தொழிலதிபர் கிஷோர் பியானி உருவாக்கிய பியூச்சர் குழும நிறுவனத்துடன் பார்தி ரீடெய்ல் லிமிடெட் நிறுவனம் இணைகிறது. இந்நிறுவனம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

இது தொடர்பாக நேற்று தனித்தனியே நடைபெற்ற பியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனம் மற்றும் பார்தி ரீடெய்ல் லிமிடெட் நிறுவன இயக்குநர் குழு கூட்டத்தில் இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இரு நிறுவனங்களும் இணைக்கப்பட்டு அதற்கு பியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்படும். இந்நிறுவனம் இரு நிறுவனங்களின் சில்லரை வர்த்தகத்தை நிர்வகிக்கும்.

அடுத்ததாக பியூச்சர் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் உருவாக்கப்படும் மற்றொரு நிறுவனம் கட்டமைப்பு, முதலீடு மற்றும் இரு நிறுவனங்களின் சொத்து நிர்வாகம் உள்ளிட்ட வற்றை நிர்வகிக்கும்.

இரு நிறுவனங்கள் இணைப் புக்குப் பிறகு பார்தி ரீடெய்ல் மற்றும் பியூச்சர் ரீடெய்ல் நிறுவன பங்குதாரர்கள் இவ்விரு நிறுவனங்களிலும் இருப்பர்.

இரு நிறுவன இணைப்புக்குப் பிறகு 570 சில்லரை வர்த்தக நிறுவனங்கள் 243 நகரங்களில் செயல்படும். இவற்றின் மொத்த பரப்பளவு 1.85 கோடி சதுர அடியாக இருக்கும்.

தற்போது பியூச்சர் குழுமம் 1.70 கோடி சதுர அடி பரப்பிலான பல்வேறு சில்லரை வர்த்தக மையங்களை நிர்வகிக்கிறது.

பார்தி ரீடெய்ல் நிறுவனம் 200 ஈசிடே ஸ்டோர்களை 114 நகரங்களில் நிர்வகிக்கிறது. இவை பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பெங்களூரு ஆகிய மாநிலங்களில் வலுவாகத் திகழ்கின்றன.

இரு நிறுவனங்களும் இணையும் போது 203 பிக் பஜார் மற்றும் ஈஸிடே ஹைபர் மார்கெட்டுகளும், 197 புட் பஜார் மற்றும் ஈஸிடே சூப்பர் மார்கெட்டுகளும் 171 பிற விற்பனை அங்காடிகளும் அதாவது ஹோம் டவுன், ஈ-ஸோன், எப்பிபி மற்றும் புட்ஹாலும் இதில் அடங்கும்.

பார்தி ரீடெய்ல் நிறுவனமும் பியூச்சர் ரீடெய்லும் இணைந்ததன் மூலம் மேலும் பல லட்சக் கணக் கான வாடிக்கையாளர்களை சென்றடைய வழியேற்பட்டுள்ளது. மேலும் இவ்விரு நிறுவனங் களுக்கு பொருள்களை சப்ளை செய்வோருக்கும் புதிய வாய்ப்புகளை இது ஏற்படுத் தியுள்ளது என்று பியூச்சர் குழுமத் தலைவர் கிஷோர் பியானி குறிப்பிட்டுள்ளார்.

இரு நிறுவனங்களும் இணைந்ததன் மூலம் மக்களிடையே பொருள் சென்று சேர்வது மேலும் அதிகரிக்கும், விநியோகம் மேம்பாடு அடையும், இரு நிறுவனங்களுக்கு உள்ள திறமை மூலம் வாடிக்கை யாளர்களுக்கு உலகத் தரத்திலான சேவை கிடைக்கும். இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியில் சில்லரை வர்த்தகம் மிக முக்கிய அங்கம் வகிக்கும். அதில் இரு நிறுவனங்களும் தங்களை வலுவாக நிலைநிறுத்திக் கொள்ள இந்த இணைப்பு வழிவகுக்கும் என்று பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத் துணைத் தலைவர் ராஜன் பார்தி மிட்டல் குறிப்பிட்டுள்ளார்.

பியூச்சர் ரீடெய்ல் என்ற நிறுவனம் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஹைபர் மார்க்கெட்டுகளை நிர்வகிக்கிறது. பியூச்சர் லைப் ஸ்டைல் பேஷன்ஸ் மற்றும் பியூச்சர் கன்ஸ்யூமர் என்டர் பிரைசஸ் என்று மொத்தம் மூன்று நிறுவனங்கள் பியூச்சர் குழுமத்தில் உள்ளன. சமீபத்தில் இந்நிறுவனம் நீல்கிரிஸ் சங்கிலித் தொடர் நிறுவனத்தை ரூ. 300 கோடிக்குக் கையகப்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in