1.50 கோடி கார்கள் உற்பத்தி: மாருதி சுஸுகி சாதனை

1.50 கோடி கார்கள் உற்பத்தி: மாருதி சுஸுகி சாதனை
Updated on
1 min read

இந்தியாவில் கார்கள் உற்பத்தியில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் 1.50 கோடி கார்களை உற்பத்தி செய்து புதிய சாதனையை எட்டி யுள்ளது. இந்தியாவில் இந்த அளவுக்கு அதிக கார்களை உற்பத்தி செய்துள்ள முதலாவது நிறுவனம் என்ற பெருமையும் இந்நிறுவனத்தையே சாரும்.

இந்நிறுவனத் தயாரிப்பில் மாருதி 800, ஆல்டோ, வேகன்ஆர், ஆம்னி உள்ளிட்ட கார்கள் அதிகம் விற்பனையான மாடல் களாகும். இது தவிர புதிய ரகங்களாக ஸ்விப்ட், டிசையர் ஆகிய மாடல் கார்களும் அதிகம் விற்பனையாகியுள்ளன.

இந்நிறுவனத்தின் முதலாவது கார் மாருதி 800 குர்கானில் உள்ள ஆலையில் 1983-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. நிறுவனத்தின் 1.50 கோடி கார் மானேசர் ஆலையில் உற்பத்தியானதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 31 ஆண்டுகளில் மாருதி 800 கார்கள் 21 லட்சமும், ஆல்டோ கார்கள் 31 லட்சமும், ஆம்னி மாடல் கார்கள் 17 லட்சமும் விற்பனையாகியுள்ளன. இதேபோல வேகன் ஆர் கார்கள் 16 லட்சமும், ஸ்விப்ட் ரகக் கார்கள் 13 லட்சமும், டிசையர் ரகக் கார்கள் 10 லட்சமும் விற்பனையாகியுள்ளன.

1994-ம் ஆண்டில் 10 லட்சம் கார்களையும், 2005-ம் ஆண்டில் 50 லட்சம் கார்களையும், 2011-ம் ஆண்டில் ஒரு கோடி கார்களையும் உற்பத்தி செய்துள்ளது. ஆண் டுக்கு 20 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் இலக்கை 2020-ம் ஆண்டில் எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக நிறுவனத் தின் செயல் இயக்குநர் ராஜீவ் காந்தி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in