

அல்ட்ரா டெக் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 24 சதவீதம் சரிந்து 657 கோடி ரூபாயாக இருக்கிறது. போட்டி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (சிசிஐ) அபராதம் செலுத்தியதால் நிறுவனத்தின் நிகர லாபம் குறைந்திருக்கிறது.
கடந்த வருடம் இதே காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 864 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் அதே சமயம் வருமானத்தில் 4 சதவீதம் உயர்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 6,317 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது உயர்ந்து 6,597 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
மார்ச் காலாண்டில் போட்டி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு 117.55 கோடி ரூபாய் அபராதமாக செலுத்தியால் லாபம் குறைந்திருப்பதாக அல்ட்ராடெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த 2014 மார்ச் காலாண்டை விட 2015 மார்ச் காலாண்டில் செலவுகள் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 5,287 கோடி ரூபாயாக இருந்த செலவுகள், இப்போது 5,520 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 4.88 சதவீதம் சரிந்திருக்கிறது. 2013-14-ம் நிதி ஆண்டில் 2,206 கோடி ரூபாயாக இருந்த நிகரலாபம் இப்போது 2,098 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது.