

நகை விற்பனையாளர் களுக்கான புதிய விற்பனையகம் முதல் முறையாக சென்னையில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. கிரிஸ் என்ற பெயரிலான இந்த பி2பி விற்பனையகத்தில் தங்க நகை விற்பனையாளர்கள் தங்க ளுக்குத் தேவையான நகைகளை ஆர்டர் செய்து பெற்றுக் கொள் ளலாம் என்று இந்நிறுவன நிர்வாக இயக்குநர் பூபேஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
முழுவதும் இயந்திரங்களின் மூலம் நகை தயாரிப்புக்கென தனி ஆலையை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இங்கு நாளொன்றுக்கு 30 கிலோ எடையிலான ஆபரணங்கள் தயாரிக்க முடியும். அத்துடன் எடை குறைந்த நகைகளையும் தயாரிக்க முடியும் என்றார்.
இந்த நிறுவனம் கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். இதுவரையில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இந்நிறுவனம் இப் போது வியாபாரிகளுக்கான நகை தயாரிப்புக்கான விற்பனையகத் தைத் தொடங்கியுள்ளது.
இத்தாலி, துருக்கி, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்கள் மூலம் உலகிலே மிகமிக இலேசான நகை வகைகளைத் தயாரிக்கிறது கிரிஸ்.
சென்னையில் பிராட்வே பகுதியில் 3,500 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது இந்த விற்பனையகம்.
சில்லரை வியாபாரிகள் இவற்றைக் கம்ப்யூட்டரிலேயே பார்த்து நேரடி ஆர்டரை முன் வைக்கலாம் என்று பூபேஷ் ஜெயின் கூறினார்.