

உலக அளவில் இணையதள சேவையை கொண்டு செல்லும் முயற்சிதான் இன்டெர்நெட் ஓஆர்ஜி என்று கூறியுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க். இன்டெர்நெட் ஓஆர்ஜி திட்டத்திலிருந்து கிளியர்டிரிப் போன்ற நிறுவனங்கள் வெறியேறியுள்ளது. இது குறித்து பேஸ்புக் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள ஸுகர் பெர்க் ஜீரோ திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஜீரோ திட்டத்தை விமர்சிக்கும் சிலர் இதையும் விமர்சனம் செய்கின் றனர். இன்டர்நெட் ஓஆர்ஜி அடிப் படையான இணையதள சேவை யாகும். இதன் மூலம் சில சேவை களை இலவசமாகக் கொடுக்கி றோம். இது இணைய சமவாய்ப் புக்கு எதிரானதல்ல. இதை நான் உறுதியாக மறுக்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நான் இணைய சம வாய்ப்புக்கு எனது முழு ஆதரவையும் கொடுக் கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இணையதளம் எப்போதும் திறந்த நிலையில் இருக்க வேண்டும். நெட்வொர்க் சேவை நிறுவனங்கள் இணையத்தை கட்டுப்படுத்தக் கூடாது.
இன்டெர்நெட் ஓஆர்ஜி என்பது சமூக வலைதளம்தான். இணைய இணைப்பு இல்லாதவர்களுக்கு இணையதள சேவையை புதுமை யாக வழியில் வழங்கும் ஒரு வழி. சாம்சங் மற்றும் குவால்காம் நிறுவனங்களோடு இதற்காக கூட்டு வைத்துள்ளோம். இந்தியாவில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறு வனம் இதன் மூலம் 30 இணைய தளங்களை இலவசமாகக் கொடுக் கிறது. உலக அளவிலான இணைப் பில் இணைய சமவாய்ப்பு என்பது ஒன்றோடொன்று இணைந்தது என்றார்.
பல்வேறு மக்களையும் இணையதளத்தோடு இணைக்கும் வேலை இணையதள சமவாய்ப் புக்கு எதிரானதல்ல. இதன் இரண்டு அடிப்படையும் ஒன்றுதான். உலக அளவிலான இணைப்பு மற்றும் இணைய சம வாய்ப்பு இரண்டும் ஒன்றோடொன்று சேர்ந்தது என்றார். இணையதளத்தில் பல்வேறு மக்களையும் இணைக்க சில உபயோகமான இலவச சேவைகளை வழங்குகிறோம். இந்த இணைப்புக்கு பணம் செலுத்த தேவையில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இன்டெர்நெட் ஓஆர்ஜி திட்டத்திலிருந்து கிளியர்டிரிப், டைம்ஸ் குரூப், என்டிடிவி போன்ற நிறுவனங்கள் வெளியேறியதன் தொடர்ச்சியாக இவ்வாறு கூறியுள்ளார்.