துணிகர முதலீட்டுத் திட்டங்களில் பிராவிடென்ட் ஃபண்ட் நிதி முதலீடு? 3 வாரங்களில் முடிவு

துணிகர முதலீட்டுத் திட்டங்களில் பிராவிடென்ட் ஃபண்ட் நிதி முதலீடு? 3 வாரங்களில் முடிவு
Updated on
1 min read

பணியாளர்களின் ஓய்வுகால நிதியை துணிகர முதலீட்டு (வெஞ்சர் கேபிடல்) திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து 3 வாரங் களுக்குள் முடிவு செய்யப்படும் என்று ஓய்வூதிய நிதி ஒழங்குமுறை மற்றும் மேம்பாட்டு (பிஎப்ஆர்டிஏ) தலைவர் ஹேமந்த் கான்டிராக்டர் தெரிவித்துள்ளார்.

பிஎப் நிதியை எந்தெந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பது குறித்து ஆராய கடந்த ஆண்டு `செபி’ அமைப்பின் முன் னாள் தலைவர் ஜி.என். பாஜ்பாய் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை கடந்த வாரம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீதான முடிவு இன்னும் 2 அல்லது 3 வாரங்களுக்குள் எடுக்கப்படும் என்று ஹேமந்த் கான்டிராக்டர் தெரிவித்தார்.

தனியார் துறையில் புதிய ஓய்வூதிய நிதிக்கான முதலீட்டு வழிகாட்டுதலை இக்குழு ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளது. அதில் தனியார் ஈக்விடி எனப்படும் பங்குகளில் முதலீடு செய்வது மற்றும் துணிகர முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளது.

இப்போதைக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேரும் நிதிகள் அனைத்தும் அரசு பங்கு பத்திரங்கள் மற்றும் நிறுவன கடன் பத்திரங்கள் மற்றும் அரசு பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் நிர்வகிக்கப்படும் தொகை ரூ. 82 ஆயிரம் கோடியாகும். இதில் தனி யார் துறையின் பங்களிப்பு வெறும் ரூ. 5 ஆயிரம் கோடியாகும்.

பிஎப்ஆர்டிஏ அமைப்பானது புதிய ஓய்வூதிய திட்ட வழிகாட்டு தலை மத்திய மற்றும் மாநில அரசு களுக்கு அளித்துள்ளது. அத்துடன் தனியார் நிறுவனங்களுக்கு மட்டு மின்றி முறைசாரா தொழிலாளர் களையும் சேர்க்கும் விதமாக வழி காட்டு நெறிகளை வகுத்துள்ளது.

பிஎப்ஆர்டிஏ குழுவில் ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்டு லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி தீபக் சத்வால்கர், எல்ஐசி முன்னாள் தலைவர் எஸ்.பி. மாத்துர், ஐஆர்டிஏ அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சி.ஆர். முரளீதரன் மற்றும் பிஎப்ஆர்டிஏ அமைப்பின் செயல் இயக்குநர் மாதவி தாஸ் ஆகியோர் உள்ளனர்.

மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை (என்பிஎஸ்) 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டு வந்தது. தொடக்கத்தில் மத்திய அரசு பணிகளில் வேலைக்குச் சேர்பவர்களுக்கு மட்டும் இத்திட்டத்தில் சேர வழி வகுக்கப்பட்டது. இருப்பினும் ராணுவ வீரர்களுக்கு இந்த ஓய்வூதிய திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. சில மாநில அரசு பணியாளர்களும் இந்த என்பிஎஸ் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

2009-ம் ஆண்டு மே 1-ம் தேதி இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அனைத்து நிலை பணியாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களும் இதில் சேரலாம் என விரிவுபடுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in