

ஜார்க்கண்டில் அமையவிருந்த மின் உற்பத்தி திட்டத்தில் இருந்து ரிலையன்ஸ் பவர் நிறுவனம் விலகிவிட்டது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் பவர் முடிவு எங்களுக்கு ஆச்சர்யமாக மட்டுமல்லாமல் சந்தேகமாகவும் இருக்கிறது என்று ஜார்க்கண்ட் அரசு தெரி வித்திருக்கிறது.
ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வெளியேறி இருப்பதற்கான உண்மை காரணம் வேறாக இருக் கலாம். மேலும் 6 மாதத்துக்கு முன்பே முடிவெடுத்த பிறகு, இப்போது வெளியேறுவதற்கு கூறும் காரணங்கள் ஆச்சர்யமளிக்கிறது என்று ஜார்க்கண்ட் அரசின் தலைமைச் செயலாளர் ராஜிவ் கௌபா தெரிவித்தார்.
மேலும் ரிலையன்ஸ் பவர் இந்த திட்டத்தில் இருந்து வெளியேறியதால் மாநிலத்துக்கு எந்த விதமான அழுத்தமும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.