Last Updated : 05 Apr, 2015 01:00 PM

 

Published : 05 Apr 2015 01:00 PM
Last Updated : 05 Apr 2015 01:00 PM

தொழில் வளர்ச்சிக்கு அரசு நடவடிக்கை: யஷ்வந்த் சின்ஹா

தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக மத்திய முன்னாள் நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த சின்ஹா கருத்து தெரிவித்தார்.

லால்பகதூர் சாஸ்திரி நிர்வாகவியல் கல்வி மையத்தில் உரையாற்றிய அவர், நவீன காலத்தில் நிறுவனங்களின் மீது அரசு நம்பிக்கை வைக்க வேண்டி யுள்ளது. அதேசமயம் நிறுவனங் களின் செயல்பாடுகளை பரிசீலித்து முந்தைய செயல்பாடுகளிலிருந்து மாறுபட்டு அவை எப்படி செய லாற்றுகின்றன என்பதைப் பொறுத்தே நம்பிக்கை வைக்க வேண்டியிருக்கிறது. இந்த வகையில்தான் தற்போதைய அரசு செயல்படுகிறது. இதற்கு பெருமளவில் வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளது. இத்தகைய சூழலில்தான் தொழில் துறை வளர்ச்சியடையும் என்று குறிப்பிட்டார்.

சுதந்திரத்துக்குப் பிறகு வந்த அரசியல் கட்சிகள் வர்த்தகத்தை ஊக்குவிக்கவில்லை. இந்தியாவில் தொழில் தொடங்க எளிதான வழி ஏற்படுத்த வேண்டுமெனில் மாநிலங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார்.

இப்போதுள்ள சூழலில் நமது ஆரம்பக் கல்வி முறையில் பெருமளவு மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசர அவசியமாகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x