Published : 02 Apr 2015 10:37 AM
Last Updated : 02 Apr 2015 10:37 AM

இவரைத் தெரியுமா?- லொரென்ஸோ சிமோநெலி

ஜிஇ எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

ஜிஇ குழுமத்தின் பதினோரு நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் உள்ளார். நான்கு வெவ்வேறு துறைகளில் அனுபவம் கொண்டவர்.

இதற்கு முன்பு ஜிஇ டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயல் இயக்குநராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.

ஜிஇ கன்ஸ்யூமர் மற்றும் இண்டஸ்ட்ரியல் நிறுவனத்தின் அமெரிக்க சிஎப்ஓ, ஜிஇ அப்ளையன்ஸ் நிறுவனத்தின் புராடக்ட்ஸ் மேனேஜ்மெண்ட் பிரிவு பொது மேலாளர் மற்றும் குழுமதின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியவர்.

1994ல் ஜிஇ குழுமத்தின் நிதி சார்ந்த திட்டங்களுக்கான நிர்வாக பிரிவில் பணிக்குச் சேர்ந்தார்.

இத்தாலியை பூர்வீகமாகக் கொண்டவர். கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் தொழில் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.

மிட்சுபிசி வங்கியின் சர்வதேச கூட்டுறவு நிதிப் பிரிவில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x