

எனக்கு பிடித்த நெருக்கமான காராக இருப்பது மாருதி சுஸூகி ஸ்விப்ட். அதிலும் கருப்பு நிறத்தின் மீது கொள்ளை பிரியம். இந்தக் காரில்தான் தற்போது கல்லூரிக்குச் சென்று வருகிறேன்.
பழமையும், புதுமையும் நிரம்பிய நவீன காராக இருக்கிறது. பழைய அம்பாசிட்டர் காரின் நவீன வடிவமாக இந்தக் காரைப் பார்க்கிறேன்.
ஓட்டுவதற்கு இலகுவாக இருப்பதும், இதன் இடவசதியும் இந்த சின்ன காரை விரும்புவதற்கு காரணம். இந்த காரின் இன்னொரு சிறப்பம்சம் இதன் பிரேக்கிங் சிஸ்டம். அவ்வளவு ஸ்மூத்தாக இருக்கும். ஏனென்றால் இங்குள்ள மலைப்பிரதேசங்கள், ஏற்ற இறக்கமான சாலைகளில் பயணிப்பதற்கு இந்த கார்தான் வசதியாக இருக்கிறது.
நான் கல்லூரி முதல் வருடத்திலேயே கார் ஓட்டக் கற்றுக் கொண்டேன். கல்லூரி இல்லாத நாட்களில் தோழிகளோடு காரில் இங்குள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றுவதுதான் எனக்கு ஹாபியாக இருந்தது.
தற்போது ஷூட்டிங் இல்லாத நாட்களில் பக்கத்து தெருவில் இருக்கும் நண்பர்களோடு காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவேன். அதனால்தான் சொகுசு கார்களை விடவும் எளிமையான அழகான இந்த சின்ன கார் என்னைக் கவர்ந்துள்ளது.