

தகவல் தொழில் நுட்பத்துறையில் பிரபலமாகத் திகழும் விப்ரோ நிறுவனம் தனது பணியாளர்களுக்கு 18,819 பங்குகளை வழங்க முடிவு செய்துள்ளது.
தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு தற்போதைய சந்தை விலையில் இந்தப் பங்குகள் ஒதுக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 20-ம் தேதி நடந்த நிறுவனத் தின் இயக்குநர் குழுகூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக் கப்பட்டது. விப்ரோ நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது. நிறுவனர் அசிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாத் தற்போது இயக்குநர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் குழுவின் கூட்டத் தில் ஜேபி மார்கன் ஸ்டேன்லி நிறுவனத்துக்கு 7,813 பங்குகளை விற்பனை செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.