

பங்குதாரர்கள் மட்டுமே என்னை இயக்குநர் குழுவில் இருந்து நீக்க முடியும் என்று விஜய் மல்லையா தெரிவித்திருக்கிறார். யுனைடெட் ஸ்பிரிட்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து மல்லையா வெளியேற வேண்டும், அவர் மீதான நம்பிக்கை போய்விட்டது என்று இயக்குநர் குழு சனிக்கிழமை தெரிவித்தது.
யூபி குழும நிதியை கிங்பிஷர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மாற்றியது காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
இதற்கு பதில் அளித்த மல்லையா, ‘தொடர்ந்து யுனை டெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவராகவே தொடர விரும்புகிறேன். இது தினசரி நடவடிக்கை கள், இயக்குநர் குழு கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடுவேன்’ என்றார்.
டிவிட்டர் தளத்தில், ‘இயக்குநர் குழுவில் இருந்து பங்குதாரர்கள் மட்டுமே என்னை நீக்க முடியும்’ எனத் தெரிவித்துள்ளார்.