இந்தியாவின் வெளிநாட்டு கடன் 46,190 கோடி டாலர்

இந்தியாவின் வெளிநாட்டு கடன் 46,190 கோடி டாலர்
Updated on
1 min read

இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் 46,190 கோடி டாலராக இருக்கிறது. டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி இந்த கடன் இருக்கிறது.

கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது கடன் அளவு 3.5 சதவிதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் வெளிநாட்டு கடன் ஜிடிபி விகிதம் 23.2 சதவீதமாக இருக்கிறது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி இந்த விகிதம் 23.7 சதவீதமாக இருந்தது.

நாட்டின் குறுகிய கால கடன் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 6.7 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆனால் நீண்ட கால கடன் 6.1 சதவீதம் அதிகரித்து 37,640 கோடி டாலராக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in