ஆளில்லா விமானம் மூலம் பொருள் விநியோகம்: அமேசானுக்கு அமெரிக்கா அனுமதி

ஆளில்லா விமானம் மூலம் பொருள் விநியோகம்: அமேசானுக்கு அமெரிக்கா அனுமதி
Updated on
1 min read

சியாட்டில் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் ஆளில்லா விமானம் மூலம் (சோதனை முறைக்கு) பொருட்களை விநியோகிப்பதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக இந்த அனுமதியை அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் வழங்கவில்லை என்று ஒரு மாதத்துக்கு முன்பு அமேசான் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க விமான போக்கு வரத்துறை இத்திட்டத்துக்கு மார்ச் மாதம் அனுமதி அளித்தது. ஆனால் அமெரிக்க ஒழுங்கு முறை ஆணையம் இந்த சோதனைக்கான அனுமதியை கொடுக்காமல் 6 மாதங்களாக இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை சில நிபந்தனைகளுடன் இதற்கான அனுமதியை வழங்கி இருக்கிறது. இந்த விமானம் 400 அடிக்கு மேல் பறக்கக் கூடாது. மணிக்கு 100 மைல் வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.

10 மைல் சுற்றுவட்ட தொலைவில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதற்காக இந்த சிறிய விமான சேவையை அமேசான் தொடங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in