

இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி வருமானம் 2013-14-ம் நிதி ஆண்டில் 25 சதவீதம் அதிகரித்து ரூ. 2,877 கோடியாக இருந்தது. 2012-13-ம் நிதி ஆண்டில் நாட்டின் வெங்காய ஏற்றுமதி வருமானம் ரூ. 2,294 கோடியாகும்.
எடை அடிப்படையில் கணக்கிட்டால் முந்தைய ஆண்டைவிட குறைவாக ஏற்றுமதி யாகியுள்ளது மொத்தம் 13.58 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இது 18.22 லட்சம் டன்னாக இருந்தது.