Published : 10 Apr 2015 10:17 AM
Last Updated : 10 Apr 2015 10:17 AM

இவரைத் தெரியுமா?- எஸ்.பி.நாயர்

இந்திய அரசு நிறுவனமான இந்தியன் இன்பிராஸ்ட்ரெக்சர் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.

முந்தைய ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் இந்த பதவிக்கு வந்தவர். வங்கி மற்றும் நிதிச் சேவை துறை சார்ந்து 37 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். சர்வதேச வங்கி அனுபவம், முதலீட்டு வங்கிகள் மற்றும் காப்பீட்டுத் துறைகளில் வல்லுனர்.

இதற்கு முன்பு ஐஎப்சிஐ நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இயக்குநர் மற்றும் குழு அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

அரசின் பல்வேறு ஆலோசனைக் குழுக்கள் மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார். இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்திலும் இயக்குநராக இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x