Published : 23 May 2014 10:30 AM
Last Updated : 23 May 2014 10:30 AM

ஜெகதீஷ் பகவதி- இவரைத் தெரியுமா?

#மும்பையில் பிறந்த குஜராத்தி இவர். அமெரிக்காவில் இருக்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருக்கிறார். மேலும் பொருளாதார ஆலோசகர், புத்தக எழுத்தாளரும் கூட.

#இவரது தந்தையும், சகோதரரும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர்கள்.

#சமஸ்கிருதத்தில் பண்டிதராகவேண்டும் என்று ஆசைப்பட்ட இவர், அப்பாவின் ஆலோசனையின் காரணமாக பொருளாதாரம் படித்தார்.

#மும்பை சைடன்ஹாம் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் அதன் பிறகு இங்கிலாந்து கேம்பிரிட்ஜில் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கல்லூரியில் படித்தார்.

#எம்.ஐ.டி. (Massachusetts Institute of Technology) முனைவர் பட்டம் பெற்ற இவர், இந்தியாவுக்குத் திரும்பினார். கொல்கத்தாவில் இருக்கும் இந்திய புள்ளியியல் கல்லூரியில் சில காலமும், டெல்லி பொருளாதார கல்லூரியில் சில வருடங்களும் பேராசியராக இருந்தார்.

#இந்திய அரசின் பத்ம விபூஷண் விருது பெற்றவர். ஜப்பான் அரசும் Order of the Rising Sun விருது கொடுத்து கௌரவித்திருக்கிறது.

#India's Tryst with Destiny, Why Growth Matters உள்ளிட்ட புத்தகங்கள், ஃபைனான்ஷியல் டைம்ஸ், வால் ஸ்டீரீட் ஜர்னல், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் 300க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x