Published : 08 Apr 2015 10:35 AM
Last Updated : 08 Apr 2015 10:35 AM

5 லட்சம் பைக்குகளை விற்க சுஸூகி நிறுவனம் இலக்கு

மோட்டார் சைக்கிள் நிறுவனமான சுஸூகி நிறுவனம் நடப்பாண்டில் இந்தியாவில் 5 லட்சம் பைக் குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித் துள்ளது.

குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து 150சிசி மற்றும் அதற்கு அதிகமான திறன் கொண்ட பைக்குகளை விற்பனை செய்ய உள்ளது. நடப்பாண்டில் 30 சதவீதம் விற்பனை உயர்வை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.

சுஸூகி நிறுவனத்தின் இந்திய பிரிவான சுஸூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் நடப்பாண்டில் சூப்பர் பைக்குள் பிரிவில் 40 சதவீத உயர்வை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. ஹயபூஸா, ஜிக்ஸர் போன்ற பைக்குகள் நடப்பாண்டில் 400 யூனிட்டுகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச தரத்திலான 800சிசி திறன் கொண்ட எஸ்1000, எஸ்1000எப் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது.

நேற்று புதிய ஜிக்ஸர் மாடல் பைக்கை டெல்லியில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. மேலும் 2014-15 நிதியாண்டில் சுமார் 3.74 லட்சம் பைக்குகளை நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தது.

150சிசி திறன் கொண்ட பைக்குகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் குறிப்பாக நிஞ்சா பிரிவு பைக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளதாகவும் கூறினார் இந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் அதுல் குப்தா. மேலும் நாங்கள் இளைஞர்களை குறிவைத்து இளைஞர்களின் இதயங்களை ஈர்க்க உள்ளோம் என்றார்.

பொதுவான பைக் விற்பனை பிரிவுகளில் பல போட்டிகள் உள்ளது. ஆனால் நிஞ்சா பைக் விற்பனையை பாதிக்கவில்லை. இருந்தாலும் பொது பிரிவு பைக்குகளை விற்பனை செய்யும் வேளையில் நிஞ்சா பைக்குகளில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளோம் என்றார்.

கடந்த ஆண்டில் 280 சூப்பர் பைக்குகள் விற்பனை செய்துள்ளோம். நடப்பாண்டில் 400 பைக்குகள் விற்பனையாகும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். சர்வதேச தரத்தில் சில சூப்பர் பைக்குகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜூன் மாத வாக்கில் எஸ்1000, எஸ்1000எப் மாடல்களை அறிமுகப் படுத்த உள்ளதாக கூறினார். மேலும் நாடு முழுவதும் விற்பனை நெட்வொர்க்கை விரிவுபடுத்த உள்ளதாகவும் குப்தா குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஜிக்ஸர் மாடல் பைக் மாதத்துக்கு 8000 யூனிட்டுகள் விற்பனை ஆவதாக குப்தா குறிப்பிட்டார். கடந்த ஆண்டு மட்டும் 50000 பைக்குகள் விற்பனை ஆனதாக கூறினார்.

600 விற்பனையகங்களை தற்போது 800 ஆக உயர்த்தி யுள்ளோம். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1500 விற்பனை மையங்களை உருவாக்க திட்டம் வைத்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

நிறுவனம் ஏ மற்றும் பி பிரிவு நகரங்களில் விற்பனை மையங்களை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. மேலும் 2011-15 காலகட்டத்தில் 30000 யூனிட் பைக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது என்றும் இதை நடப்பாண்டில் 50000 யூனிட்டுகளாக அதிகரிக்க உள்ளோம் என்றும் குப்தா கூறினார்.

தற்போது சுஸூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் அருகில் உள்ள நாடுகள் தவிர லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

சுஸூகி இந்தியா நிறுவனம் ஆண்டுக்கு 5.4 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x