Last Updated : 28 Apr, 2015 10:07 AM

 

Published : 28 Apr 2015 10:07 AM
Last Updated : 28 Apr 2015 10:07 AM

எல்ஐசி-யில் 40 செயல் இயக்குநர்கள் திடீர் மாற்றம்

ஆயுள் காப்பீட்டுத் துறையில் முன்னணியில் உள்ள பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி-யில் 40 செயல் இயக்குநர்கள் அதிரடியாக மாற்றம் செய் யப்பட்டுள்ளனர்.

எல்ஐசி-யின் சந்தை மதிப்பு கணிசமாக சரிந்ததைத் தொடந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செயல் இயக்குநர்களாக இருப்பவர்கள் 3 ஆண்டுகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட மாட்டார்கள்.

நிறுவன காப்பீட்டுத் திட்டங்களை மேம்படுத்தும் பிரிவு மற்றும் சந்தைப் பிரிவின் தலைவராக இருந்த எஸ்.என். பட்டாச்சார்யா, நிறுவனத்தின் மக்கள் தொடர்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேற்கு மண்டலத்தில் இருந்த வினய் ஷா இப்போது இப்பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பணியாளர் நலன் பிரிவில் இருந்த குமார், ஓய்வூதியத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆர்.ஜி. ஷிண்டே மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணிமாற்ற உத்தரவு இம்மாதம் 11-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x