Published : 23 Apr 2015 10:22 AM
Last Updated : 23 Apr 2015 10:22 AM

இவரைத் தெரியுமா?- அதுல் ரூயா

போனிக்ஸ் மில்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர். 2007 மே மாதத்திலிருந்து இந்த பொறுப்பு வகிக்கிறார்.

பங்குதாரர்கள் நலன் காக்கும் குழுவின் உறுப்பினர், தணிக்கை குழு உறுப்பினர், நிதி மற்றும் முதலீட்டுக்குழு உறுப்பினர் என இந்த நிறுவனத்தின் இதர பொறுப்புகளையும் வகிக்கிறார்.

நான்கு வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 17 நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இடம் பிடித்துள்ளார்.

ஜவுளித் துறையில் ஈடுபட்டு வந்த போனிக்ஸ் நிறுவனத்தை சில்லரை வர்த்தக மால்களை நோக்கி கவனம் திருப்பியதில் ரூயாவின் பங்கு முக்கியமானது.

இதற்கு முன்பு யுபி அஸ்பெஸ்டாஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.

2010 லிருந்து எண்டர்டெயின்மென்ட் வேர்ல்டு டெவலப்பர் நிறுவனத்தில் பொறுப்புகள் இல்லாத இயக்குநராகவும் இருந்து வருகிறார்.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x