

பங்குச்சந்தை சூழ்நிலைகள் சாதகமாக இருப்பதால், நடப்பு நிதி ஆண்டில் பல நிறுவனங்கள் பொது பங்கு வெளியிட (ஐபிஓ) காத்திருக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி காத்திருக்கும் நிறு வனங்கள் அனைத்தும் 9,000 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்திருப்பதாக கணிக்கப்பட்டி ருக்கின்றது. இந்த தொகை விரிவாக்க பணிகள், செயல் பாட்டு மூலதனம் உள்ளிட்ட விஷயங்களுக்கு பயன்படுத்தப் படும்.
கத்தோலிக் சிரியன் வங்கி, ஏஜிஎஸ் டிரான்ஸ்போர்ட் டெக்னா லஜீஸ், ஸ்ரீ புஷ்கர் கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ், அமர் உஜாலா ஆகிய நிறுவனங்கள் வரும் மாதங்களில் பொது பங்கினை வெளியிட திட்ட மிட்டிருக்கின்றன.
தற்போதைய நிலையில் 11 நிறுவனங்கள் 5010 கோடி ரூபாய் அளவுக்கு பொது பங்கு வெளியிட்டு சந்தையில் நிதி திரட்ட திட்டமிட்டிருக்கின்றன. இதற்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் அனு மதியை இந்த நிறுவனங்கள் பெற்று விட்டன. இன்னும் 11 நிறுவனங்கள் 3,602 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட காத்திருக்கின்றன.
இந்த நிறுவனங்கள் அனுமதிக் காக செபியிடம் விண்ணப்பித்தி ருக்கின்றன. இருந்தாலும் இதில் பெரிய பங்கு வெளியீடு என்று எதுவும் இல்லை என பிரைம்டேட்டா பேஸ் நிறுவனத் தின் நிர்வாக இயக்குநர் பிரணவ் ஹால்டியா தெரிவித்தார்.
முன்னதாக ஐநாக்ஸ் விண்ட், ஆட்லேப்ஸ் என்டர்டெயின் மென்ட் மற்றும் ஆர்டெல் கம்யூனி கேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் கடந்த மாதம் பங்கு வெளியிட்டன.
தற்போதைய நிதி ஆண்டில் அதிகமாக பங்கு வெளியீடுகள் காத்திருந்தாலும் 2014-15-ம் நிதி ஆண்டில் புதிய பங்கு வெளியீடு மூலம் 2,769 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டது.
இன்று பட்டியலாகிறது ஆட்லேப்ஸ்
ஆட்லேப்ஸ் எண்டர்டெயின் மென்ட் நிறுவனத்தின் பங்குகள் இன்று பங்குச்சந்தையில் பட்டிய லிடப்படுகின்றது. கடந்த மாதம் வெளியான இந்த ஐபிஓக்கு 1.1 மடங்கு அளவுக்கு முத லீட்டாளர்களிடமிருந்து ஆதரவு கிடைத்தது.