Published : 07 Apr 2015 10:30 AM
Last Updated : 07 Apr 2015 10:30 AM

இவரைத் தெரியுமா?- மார்ட்டின் லுன்ஸ்டெட்

முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஸ்கானியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி

1967ல் பிறந்தவர், இண்டஸ்ட்ரியல் இன்ஜீனியரிங் பட்டமும், மேலாண்மை பட்டமும் பெற்றவர்.

ஸ்கானியா நிறுவனத்தில் 1992 இல் பயிற்சியாளராக பணிக்குச் சேர்ந்தார். நிறுவனத்தின் அனைத்து நிலைகளிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 2001ல் இந்த நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்றார்.

2012 ல் சிஇஓ வாக பொறுப்பேற்றார். குழுமத்தின் இரண்டு நிறுவனங்களில் இயக்குநர் குழுவில் இருக்கிறார். ஆட்டோமொபைல் துறையில் 20 வருட அனுபவம் கொண்டவர்.

வாகன இன்ஜின் உற்பத்தி துறையில் உலக அளவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த உயர்தரமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என் ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு ஏற்ப விற்பனை மற்றும் சந்தையில் உறுதியாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

வளர்ச்சி வருமானத்தை கொண்டு வரும் என்பது இவரது கொள்கை. வளரும் நாடுகளுக்கு தொழிலை விரிவாக்கம் செய்து வருகிறார்.

இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி ஆலை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x