

எஸ்பிஐ லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில், 10 சதவீத பங்குகளை விலக்கிக்கொள்ள எஸ்பிஐ திட்டமிட்டு வருகிறது. எஸ்பிஐ லைப் இன்ஷூரன்ஸ் ஒரு கூட்டு நிறுவனமாகும்.
இதில் எஸ்பிஐ பங்கு 74 சதவீதமும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎன்பி கார்டிப் நிறுவனத்துக்கு 26 சதவீதப் பங்குகளும் உள்ளது. தற்போது அந்நிய முதலீடு 10 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளதால் எஸ்பிஐ பங்கு 64 சதவீதமாக குறைய உள்ளது.
கடந்த மாதத்தில் காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்கும் சட்டம் நிறைவேற் றப்பட்டது.
அப்போதிலிருந்தே இந்தி யாவில் முதலீடு செய் திருக்கும் வெளிநாட்டு நிறுவ னங்கள் தங்களது பங்கினை உயர்த்திக்கொள்ளும் திட்டத்தில் இருந்தன.
கடந்த வாரம் எஸ்பிஐ பொதுக் காப்பீடு நிறுவனத்தில் அந்நிய முதலீடு 49 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.
ஆஸ்திரேலி யாவை சேர்ந்த ஐஏஜி குழுமம் தங்களுடைய பங்கினை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தது.
நடப்பாண்டில் மேலும் பங்கு களை விலக்கிக்கொள்ளும் திட்டம் இல்லை எனவும், இன்னும் ஆறு மாதங்களுக்கு பொதுப் பங்கு வெளியிடும் திட்டம் இல்லை எனவும் எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது.