

பிரான்ஸ் நாட்டு நிறுவனமான கேப்ஜெமினி நிறுவனம் மென் பொருள் சேவை நிறுவனமான ஐகேட் நிறுவனத்தை வாங்குகிறது. 400 கோடி டாலர் (ரூ.24,274 கோடி) கொடுத்து ஐகேட் நிறுவனம் வாங்கப்படுகிறது. ஒரு பங்கு 48 டாலர் கொடுத்து வாங்கப்படுகிறது.
அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஐகேட் நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு வருமானம் 130 கோடி டாலராக இருக்கிறது. மூன்று மடங்கு விலை கொடுத்து ஐகேட் நிறுவனம் வாங்கப்பட இருக்கிறது. தற்போது மென்பொருள் துறை மந்தமாக இருக்கும் நிலையில் மூன்று மடங்கு விலை கொடுத்து வாங்கி இருப்பது கவனிக்கத்தக்கது.
வட அமெரிக்க சந்தையில் கவனம் செலுத்துவதற்காகவே ஐகேட் நிறுவனம் வாங்கப்பட்டி ருப்பதாக கேப்ஜெமினி தெரிவித் திருக்கிறது. தற்போதைய நிலையில் கேப்ஜெமினி நிறு
வனத்தின் பெருமளவு வருமானம் ஐரோப் பிய சந்தையில் இருந்து வருகிறது. அதேபோல ஐகேட் நிறுவனத்தின் 79% வருமானம் அமெரிக்க சந்தையில் இருந்து வருகிறது. இந்த இணைப்புக்கு பிறகு கேப்ஜெமினி நிறுவனத்தின் அமெரிக்க வருமானம் 30 சதவீதமாக உயரும். தற்போது அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் வருமானம் 22 சதவீத மாக இருக்கிறது.
முக்கிய அம்சங்கள்
இந்த இரு நிறுவனங்களும் இணைந்த பிறகு கேப்ஜெமினி நிறு வனத்தின் இந்திய பணியாளர்கள் எண்ணிக்கை 83,000 அளவுக்கு உயர்ந்திருக்கிறது. உலகம் முழுவதும் 1.90 லட்சம் பணியாளர்கள் இருக்கிறார் கள். 2016-ம்ஆண்டு பணியாளர்களின் எண் ணிக்கை ஒரு லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐகேட் நிறுவனத்தை வாங்கி இருப்பதன் மூலம் அந்த நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் மூலம் கேப்ஜெமினி நிறுவனம் மேலும் வளர்ச்சி அடைய முடியும். நிதிச்சேவைகள் பிரிவில் அதிக கவனம் செலுத்தி வரும் ஐகேட் நிறுவனத்துக்கு ராயல் பேங்க் ஆப் கனடா உள்ளிட்ட முக்கிய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஐகேட் நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்து வருகிறது, தவிர 19 சதவீத செயல்பாட்டு லாபமும் இந்த நிறுவனத்துக்கு உள்ளது. கேப்ஜெமினி வசம் யுனிலீவர், பிஏஏ உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் உள்ளார்கள்.
ஐகேட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அசோக் வெமுரி தொடருவார் என்றும், பணி யாளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என்று கேப்ஜெமினி நிறுவனத்தின் தலைவர் பால் ஹெர்மலின் தெரிவித்திருக்கிறார். மேலும் ஐகேட் நிறுவனம் கேப் ஜெமினி நிறுவனத்தின் துணை நிறுவன மாக செயல்படும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு 2015-ம் ஆண்டு இரண்டாம் பாதியில் முடியும் என்று தெரிகிறது.
கேப்ஜெமினி நிறுவனம் 2006-ம் ஆண்டு கன்பே இன்டர்நேஷனல் என்னும் இந்திய நிறுவனத்தை வாங்கியது. இதன் மூலம் இந்தி யாவில் கணிசமான சந்தையை பிடித்தது.
2011-ம் ஆண்டு பட்னி கம்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தை 120 கோடி டாலர் கொடுத்து ஐகேட் நிறுவனம் வாங்கியது.