Published : 29 Apr 2015 10:48 AM
Last Updated : 29 Apr 2015 10:48 AM

குளோபல் கன்ஸ்யூமர் புராடக்ட் நிறுவனத்தின் புதிய சாக்லேட் அறிமுகம்

குளோபல் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் நிறுவனம் நேற்று சென்னையில் புதிய சக்லேட்டை அறிமுகப்படுத்தியது. திரைப்பட நடிகர் சித்தார்த் இந்த சாக்லேட்க்கான விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனம் லவ்விட் என்கிற பெயரிலான சாக்லேட்டுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறது.

கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் மிட்சூய் குளோபல் நிறுவனங்களின் வென்ச்சர் கேபிடல் கொண்டு குளோபல் சிபி நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது லவ்விட் சாக்லேட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

விரைவில் குளிர்பானம், ஸ்நாக்ஸ் உள்ளிட்ட இதர பொருட்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. வருங்காலத்தில் உணவு பொருள் சந்தையில் களம் இறங்க திட்டம் வைத்திருக்கிறது.

சாக்லேட் தயாரிப்பில் சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தை இந்தியாவில் கொண்டு வரவேண்டுமென்பதே எனது இலக்கு என்று இந்த நிறுவனத்தின் தலைவர் மகேந்திரன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். இந்தியாவில் சாக்லேட் விற்பனை சந்தை 7,000 கோடி மதிப்பு கொண்டது.

இது ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சியைக் கொண்டது என்றார். தவிர வளர்ச்சிக்காக நிறுவனங்களை இணைப்பு குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார். தற்போது போதுமான முதலீடு இருப்பதாகவும், உடனடியாக முதலீடு ஏதும் தேவை இல்லை என்றும் கூறினார்.

இந்திய சாக்லேட் சந்தையில் தென் இந்தியா மட்டும் 30 சதவீத சந்தையை வைத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x