224 திட்டப் பணிகளுக்கான செலவு ரூ.2 லட்சம் கோடி அதிகரிப்பு

224 திட்டப் பணிகளுக்கான செலவு ரூ.2 லட்சம் கோடி அதிகரிப்பு
Updated on
1 min read

மத்திய அரசு உதவியுடன் மேற் கொள்ளப்படும் கட்டமைப்புத் திட்டப் பணிகளில் 224 பணிகள் முடங்கியுள்ளன. உரிய காலத்துக்குள் இவை முடிக்கப்படாததால் இவற்றுக்கான செலவுத்தொகை கூடுதலாக ரூ. 2 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இத்தகவலை மக்களவையில் புள்ளியியல் துறை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித் துள்ளார்.

மக்களவையில் நேற்று எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறிய தாவது: சாலை அமைப்பது, ரயில்வே மற்றும் மின்சாரம் உள்ளிட்ட வற்றில் அரசு உதவியுடன் மேற் கொள்ளப்படும் 224 திட்டப் பணி கள் முடங்கியுள்ளன.

மொத்தம் 738 பணிகள் கண் காணிக்கப்படுகின்றன. கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி இத்திட்டப்பணிகளுக்கான மொத்த செலவுத் தொகை ரூ. 9,77,589 கோடியாகும். ஆனால் இப்பணிகள் நிறைவடையும்போது செலவுத் தொகை ரூ. 11,84,766 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 738 திட்டப் பணிகளில் 315 திட்டப் பணிகள் உரிய காலத்துக்குள் முடிக்கப்படாமல் உள்ளன. இவற்றில் 224 திட்டப் பணிகளுக்கான செலவுத் தொகை நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகரித்துள்ளது. 76 திட்டப்பணி களில் காலதாமதம் ஆனதோடு செலவுத் தொகையும் அதிகரித் துள்ளது. 224 திட்டப் பணிகளுக்கான அதிகரித்த செலவுத் தொகை ரூ.2,07,177 கோடியாகும்.

மத்திய அரசு புள்ளியியல் துறை மூலமாக ரூ. 150 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்புத் திட்டப் பணிகளை கண்காணித்து வருவதாக அமைச் சர் குறிப்பிட்டார்.

திட்டப் பணிகளை உரிய காலத்தில் முடிப்பதற்காக அவை குறித்து அடிக்கடி ஆய்வு மற்றும் திட்டப் பணியில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து விவாதித்து வருவதால் பணிகளின் செயல் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட் டுள்ளது என்றார். உரிய காலத்தில் பணிகளை முடிப்பதற்காக அரசு நிலைக்குழு ஒன்றை ஏற்படுத்தி யுள்ளது.

மத்திய அரசு திட்டப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வது, அவற்றை உரிய காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு கண்காணிக்கும்.

மேலும் பணிகள் சார்ந்த துறைகளுடன் கலந்து பேசி திட்டப் பணிகள் முடங்கியுள்ளதற்கான காரணத்தை அறிந்து அவற்றைப் போக்கும் பணிகளை இக்குழு மேற்கொள்ளும் என்று அமைச்சர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in