

வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவிவதால் ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயர்ந்துள்ளது. ஈரோடு மஞ்சள் சந்தைக்கு வெள்ளிக்கிழமை 10,500 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு வந்தது. இதில் 6,000 மூட்டைகள் விற்பனையானது. இதனால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் சங்கத்தலைவர் ஆர்.கே.வி.ரவிசங்கர் தெரிவித்தார்.
விரலி மஞ்சளின் விலை குவிண்டாலுக்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. விரலி மஞ்சள் ரகம் (பழையது) ஒரு குவிண்டால் ரூ.5,508 முதல் ரூ.8,611 வரை விற்பனையானது. அதேபோல வேர் மஞ்சள் ரகம் ஒரு குவிண்டால் ரூ.5,400 முதல் ரூ.7,811 வரை விற்பனையானது.
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரகம் ரூ.7,669 முதல் ரூ. 8,884 வரை விற்பனையானது. வேர் மஞ்சள் ரகம் குவிண்டால் ரூ.6,569 முதல் ரூ.7,867 வரை விற்பனையானது. சந்தைக்கு 1594 மூட்டை மஞ்சள் வரத்து இருந்தது, இதில் 1,484 மூட்டைகள் விற்பனையாயின.
ஈரோ கூட்டுறவு விற்பனையாளர்கள் சங்கத்தில் விரலி மஞ்சள் ரகம் ஒரு குவிண்டால் ரூ.7,499 முதல் ரூ.8,769 வரை விற்பனையானது. 1,684 மூட்டை மஞ்சள் வரத்து இருந்தது, இதில் 1,593 மூட்டைகள் விற்பனை யாயின.